என் குழந்தைகளை உங்கள் அப்பாவிடம் இருந்து பாதுகாப்பேன் : இமானை வறுத்தெடுத்த முதல் மனைவி !!

என் குழந்தைகளை உங்கள் அப்பாவிடம் இருந்து பாதுகாப்பேன் : இமானை வறுத்தெடுத்த முதல் மனைவி !!

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் இமான், இசைத்துறையில் சிறப்பாக பயணம் சென்று கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு கசப்பானதாக இருந்துள்ளது

. இதனால் 12 ஆண்டுகளாக மோனிகா ரிச்சார்டு என்பவருடன் திருமண பந்தத்தில் இருந்த இமான், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். மேலும், சட்டப்படி விவாகரத்தும் பெற்றார்.

மோனிகாவுக்கும் இமானுக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.மனைவியை விட்டுபிரிந்து வாழ்ந்த இமான், அண்மையில் எமிலி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

எமிலியின் மகளை தன்னுடைய 3வது மகளாக ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். இமானின் 2வது திருமண புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், இமானின் மறுமணத்துக்கு முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சார்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் வாழ்த்துடன் கூடிய வசைகளையும் சரமாரியாக பாடியுள்ளார்.

அதில், 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை உங்களால் உடனடியாக மாற்றிவிட முடியும் என்றால், உங்களை மாதிரியான நபருடன் 12 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் என நினைக்கும்போது நான் ஒரு முட்டாள் என்பதை உணர்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக மகள்களை நீங்கள் பார்க்கவோ, கவனிக்கவோ இல்லை.

ஆனால், அவர்களுக்கு பதிலாக மற்றொருவரை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். என்ன ஆனாலும் என் குழந்தைகளை உங்கள் அப்பாவிடம் இருந்து பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புதுக்குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்குவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com