தற்கொலை செய்வதை நான் ஆதரிக்கிறேன் : நடிகை கஸ்தூரி பேசியது உண்மையா?

தற்கொலை செய்வதை நான் ஆதரிக்கிறேன் : நடிகை கஸ்தூரி பேசியது உண்மையா?

90-களில் வெளியான பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கஸ்தூரி. திருமணம் பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதோடு சின்னத்திரையில் சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது கருத்து சொல்லி சர்ச்சைகளிலும்யிலும் சிக்குவார். நடிகை கஸ்தூரி தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சுஷாத் சிங் மரணம் குறித்து பேசியுள்ளார்.

இன்று நான் ஓரளவு பகுத்தறிவுடன் இருக்கிறேன் என்றால் அது நடிகரும், இயக்குநருமான மறைந்த மணிவண்ணன் அவர்கள் தான். அதே போல தமிழ் ஆர்வமும் அவரிடத்திலிருந்து வந்தது தான். தமிழையும் பகுத்தறிவையும் மிகவும் எதார்த்தமாக கூறிவதும் மணிவண்ணன் லெஜண்ட் என்று கூறினார்.

பல நடிகர்கள் பணபிரச்சினை காரணமாகவும், சினிமாவில் சாதிக்க முயவில்லை, மன அழுத்தம்போன்ற காரணங்களால் கூட தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தற்கொலை என்பது ஆயிரக்கணக்கில் தினமும் கடந்து கொண்டு இருக்கிறது. இதில், ஒரு சதவிகிதம் நான் சினிமாவில் நடக்கிறது. ஆனால், சினிமாவில் இருப்பவர்கள் பிரபலமாக இருப்பதால் அது அதிகஅளவில் வெளியில் தெரிகிறது.

பல காரணங்களுக்காக தற்கொலை நடைபெறுகிறது மன அழுத்தம், வயிற்று வலி, என என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். நான் தற்கொலைக்கு ஆதரவு கிடையாது, ஆனால், திடீரென்று ஒருநாள் இறந்துவிடாமல், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு நான் வாழ்ந்ததுபோதும் என்று தற்கொலை செய்துக்கொள்வதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் அந்த ஆப்சன் இல்லை என்று, தற்கொலை குறித்து பல கருத்துக்களை கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com