கௌதம் கார்த்திக் - சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

கௌதம் கார்த்திக் - சரத்குமார்  இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

Big Print Pictures தயாரிப்பில், சமீபத்தில் SONYLIV தளத்தில் வெளியான, ஆதி பினிசெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் நடிப்பில், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையமைப்பில் பிருதிவி ஆதித்யாவின் இயக்கத்தில் உருவான (தமிழ் மற்றும் தெலுங்கு), இருமொழித் திரைப்படமான “கிளாப்” மிக அற்புதமான வரவேற்பை பெற்றதில் தயாரிப்பாளர் திரு. I B கார்த்திகேயன் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

தற்போது, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புகழ்பெற்ற பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனர், தெலுங்கு திரையுலகில் பல படங்களிக்கு பைனான்ஸ் செய்தவருமான, Tripura Creations திரு. முரளிகிருஷ்ணா வங்கயாலபதி உடன் கைகோர்த்து புதிய தமிழ் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். தற்போது Tripura Creations நிறுவனம் டாக்டர் ராஜசேகரின் "சேகர்" படத்தை தயாரித்து வருவது குறிப்பிடதக்கது.

Tauras Cinecorp திரு. வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம் தெலுங்கில் “கார்த்திகேயா”, “காதலோ ராஜகுமாரி”, போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களைத் தயாரித்தவர் தற்போது தமிழில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் ராஜ் வர்மா நடிப்பில் “கேங்க்ஸ்டர் கிரானி” படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த தயாரிப்பாளர்கள் மூவரும் இணைந்து, கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மதுரை பின்னணியில் ஆக்‌சன் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் CS இசையமைக்கிறார்.

Big Print Pictures, Tripura Creations & Tauras Cinecorp ஆகிய மூன்று நிறுவனங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்டில் பல நல்ல திரைப்படங்களை தயாரிக்கவுள்ளன,

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com