நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இது அவருடைய 50வது திரைப்படம். இதில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் காந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உங்களின் 50வது படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? என்று ஹன்சிகாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆமா, வருத்தமாக இருக்குது என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் அதற்கு இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிருக்கிறது ஏமாற்றம் என்று சொல்லலாம்.
ஆனால் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்று என்னுடைய 55வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால் பரவாயில்லை! ஒவ்வொரு படத்திற்கும் விதி-ன்னு ஒன்று இருக்கிறது. அது மாதிரி மஹா படத்திற்கும் அதன் விதி இருக்கிறது. மஹா ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில் எல்லாம் சீராகும். இந்த தாமதம் உள்பட எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்புகிறேன்’ என்றார்.