வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்த “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்

“டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்
“டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்

இன்னும் 8 நாட்களில் வெளியாக காத்திருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” இந்தியாவில் பிளாக்பஸ்டர் பாக்ஸ்ஆபிஸ் கலெக்‌ஷனை பெறபோகிறது, வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்திற்கு இந்தியாவில் முதல் முறையாக, படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன் முன்பதிவு தொடங்கப்பட்டது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் மே 6, 2022 அன்று வெளியாகவுள்ளது.

உலக திரை வரலாற்றில் ஒவ்வொரு முறை பாக்ஸ்ஆபிஸ் சாதனை முறியடிக்கபடும் போதும், மார்வல் திரையுலகின் திரைப்படம் அதில் இருக்கும், அதுபோல இந்த முறை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் ஒரு புது சாதனையை நிகழ்த்தவுள்ளது.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அட்வான்ஸ் முன்பதிவு மூலமாகவே 10 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது, இன்னும் படம் வெளியாக 8 நாட்கள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மார்வல் ஸ்டுடியோஸ் உடைய “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் 2022-ல் உலகமெங்கும் அனைத்து திரை ரசிகர்களாலும் எதிர்பார்க்கபடும் திரைப்படமாக உள்ளது.

இந்த மிகப்பிரமாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம் வெளியீட்டிற்கு 30 நாட்களுக்கு முன்னர், அட்வான்ஸ் முன்பதிவு செய்யும் விஷயத்தில், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட் திரைப்படத்தில் இப்படியொரு அட்வான்ஸ் முன்பதிவு செய்வது இதுவே முதல்முறை.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com