மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா திருமணமாகி 18 வருடங்கள் கழித்து மனைவியை விவாகரத்து செய்தார்.
மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குநர்  பாலா

இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களை மெருகேற்றியவர் இயக்குநர் பாலாதான். இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா, சுமூகமான முறையில் மனைவியை பிரிந்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பாலா, கடந்த 2004ம் ஆண்டு முத்துமலரை திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக மனதளவில் பிரிந்திருந்தனர். இந்நிலையில், இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com