இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணம் : இசை ரசிகர்கள் சோகம் !!

இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன்
இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன்

கேரள திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1956-ல் எளிமையான இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே இசை பயின்று மலையாள நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். பிறகு திரைப்படத்துறையில் நுழைந்து தனது திறமையால் பிரலமான இசையமைப்பாளராக மாறினார்.

‘நான் ஸ்டீவ் லோபஸ்’, ‘திருஷ்டானம்’, ‘சாயில்யம்’, ‘பம்பாய் மிட்டாய்’, ‘நகரம்’, ‘பயாஸ்கோப்’, ‘ஈடா’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டில், ‘பயாஸ்கோப்’ படத்திற்காக பாரிஸ் சந்திரன் சிறந்த பின்னணி இசைக்கான கேரள மாநில விருதைப் பெற்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 இல், ‘பிரணயத்தில் ஒருவாள்’ என்ற டெலிபிலிம் மூலம் கேரள அரசின் தொலைக்காட்சி விருதைப் பெற்றார். பாரிஸ் சந்திரனுக்கு ஷைலஜா என்ற மனைவியும், ஆனந்த் மற்றும் ஆயுஷ் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com