850 தியேட்டர்களில் வெளியாகும் பீஸ்ட் !!

பிரம்மாண்டமாக வெளியாகும் பீஸ்ட் திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் பீஸ்ட் படம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
850 தியேட்டர்களில் வெளியாகும் பீஸ்ட் !!

நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போகும் நிலையில் பீஸ்ட் பட வியாபாரங்களும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள ட்ரைலர் யூடியூபில் 40 மில்லியனுக்கு அதிகமாக பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,

விஜய் பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் 800 - 850 திரையரங்குகள் வரை வெளியாகும் என கூறியுள்ளார். தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இதனால் பீஸ்ட் திரைப்படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com