சினிமா பிரபலங்களை கவர்ந்த பால்மெய்ன் டி-சர்ட் :

திரைப்படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்தும் ஆடைகளுக்கு சில சமயங்களில் சந்தையில் அதிக கிராக்கி இருக்கும். அந்தவகையில் பிரபலங்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது Balmain T-shirt.
சினிமா பிரபலங்களை கவர்ந்த பால்மெய்ன் டி-சர்ட் :

பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன், கோலிவுட்டில் சிம்பு, விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் தற்போது இந்த டிஷர்ட்டை அணிந்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு டிஜிட்டல் விருது விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கருப்பு ஜீன்ஸ் மற்றும் பால்மெய்ன் டி-சர்ட் அணிந்திருந்தார். இதே டி-ஷர்ட்டை நாமும் வாங்கி அணியலாம் என்று தேடிய ரசிகர்கள் அதன் விலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் இந்த டி-ஷர்ட்டின் விலை $558, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 45,100. பால்மெய்ன் டி-சர்ட் என்பது அதன் தனித்துவத்தை உருவாக்குகிறது.

பாரிஸை தளமாகக் கொண்ட நிறுவனம் உயர்தர ஆடைகள், ஜாக்கெட்டுகள் மற்றும் இதர ஆடை தயாரிப்பில் சந்தையில் முன்னணியில் உள்ளது. பால்மெய்ன் கவுன்கள் இத்தாலி, சீனா, ஜப்பான், பல்கேரியா, போர்ச்சுகல் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் உருவாக்கப்படுகின்றன.

1945-ல் Pierre Balmain என்பவரால் நிறுவப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆடம்பர பேஷன் ஹவுஸ் ஆகும். இது தற்போது நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ் ஆகிய இடங்களில் தங்களது கடைகளை அமைத்துள்ளது. 2015-ல் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 120 மில்லியன் டாலராக இருந்தது. 2012-ல் 30 மில்லியன் டாலரில் இருந்து அசுர வளர்ச்சி அடைந்தது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com