வேலையில்லா பட்டதாரி பாகம்-2 இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு பிஏ-வாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக்பாஸில் சக போட்டியாளராக இருந்த ஹரிஷ் கல்யாணுடன் மிகவும் நெருங்கி பழகிய ரைசா அப்பொழுது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த உடனேயே ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரைசாவுக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது
பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரைசா வில்சன் அளித்த பேட்டி ஒன்றில் ஹரிஷ் கல்யாணை காதலிக்கிறார்களா என கேட்டதற்கு இல்லை இல்லை அவர் ஹரிஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர் அவர் க்யூட்டான நண்பர் அவரை நான் எப்போதும் காதலித்தது இல்லை என ஹரிஷ் கல்யாண் மீதான கிசுகிசுவுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.