விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்தவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இருவரின் நடிப்பு அந்த சீரியலில் அதிக பாராட்டுகளை பெற்றது என்று தான் கூற வேண்டும். அந்த சீரியலில் நடித்த போது இருவரும் காதலித்தனர். சஞ்சீவ் வீட்டில் மட்டுமே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
ஆனால், ஆலியாவின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் இருவரும் சஞ்சீவ் வீட்டு பெற்றோர்கள் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் ஐலா என்ற அழகான பெண் குழந்தை இருக்கிறது. திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டதும் கூட ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வந்தார். இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார் ஆல்யா மானசா.
கர்ப்பமாக இருந்த போதும் சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்காக திடீரென சீரியலில் இருந்து விலகினார்.
இந்த மாதம் இறுதியில் அவருக்கு பிரசவ தேதி அளித்திருப்பதாக சஞ்சீவி முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆலியா மானசா குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதோடு குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.