அக்ஷராஹசன் & உஷா உதுப் நடித்துள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

அக்ஷராஹசன் & உஷா உதுப் நடித்துள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

சர்வதேச திரைப்பட விழா சர்க்யூட்டில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்ற காமெடி டிராமா கதைக்களம் கொண்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (தி மித் ஆஃப் தி குட் கேர்ள்) திரைபடத்தை தற்போது Prime Video இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் உஷா உதுப், அஞ்சனா ஜெயபிரகாஷ், மால்குடி சுபா, ஜானகி சபேஷ் மற்றும் சுரேஷ் சந்திர மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ட்ரெண்ட் லவுட் தயாரித்து, ராஜா ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள இப்படம், HBO-இன் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா, பாஸ்டனில் நடந்த கலிடோஸ்கோப் இந்திய திரைப்பட விழா, சிகாகோ தெற்காசிய திரைப்பட விழா, அட்லாண்டா இந்திய திரைப்பட விழா, சியாட்டிலில் தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா மற்றும் கனடாவில் மொசைக் சர்வதேச தெற்காசிய திரைப்பட விழா போன்ற பல்வேறு மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் தற்போது இந்தியாவில் உள்ள Prime மெம்பர்களுக்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

“ராஜா அவர்கள் என்னிடம் கதையைச் சொன்னபோதே, இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே எழுந்தது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு நமது தினசரி ஒரு பகுதியை எடுத்துக் காட்டும் திரைப்படம் எனலாம். ஓர் இளம் பெண் தனது ஆசைகள் மற்றும் குடும்ப அழுத்தங்களுக்கு இடையில் போராடும் சூழலை விளக்கும் இப்படத்துடன் ஒவ்வொரு இளைஞரும் தன்னைக் காண்பார்கள் நான் நம்புகிறேன். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பெற்ற அன்பு மற்றும் பாராட்டுக்களால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் நாடு முழுவதும் உள்ள பிரைம் வீடியோ பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்." என்று அக்ஷரா ஹாசன் கூறினார்.

“பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பும் எனக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படம் எனக்கு உண்மையிலேயே ஸ்பெஷல்” இந்தப் படத்தில் நான் அக்ஷராவின் பாட்டியாக, ஒரு பிரபல மூத்த கர்நாடக இசைப் பாடகியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதனால் நான் இப்படத்தில் பாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படம் மிகவும் அற்புதமாக உருவெடுத்துள்ளது, இது ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டும்மல்ல, உங்களுக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் நேர்மையாக இருங்கள் எனும் மிக முக்கியமான செய்தியையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு Amazon Prime Video-இல் ஸ்ட்ரீமிங் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்” என்கிறார் உஷா உதுப்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com