இணையத்தில் தீயாய் பரவும் அஜித்–ஷாலினி ரொமான்டிக் போட்டோ !!

இணையத்தில் தீயாய் பரவும் அஜித்–ஷாலினி ரொமான்டிக் போட்டோ !!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயின் ஆனவர் ஷாலினி. இதே போல் அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் பேசப்படாமல் இருந்த நிலையில் ஆசை, காதல் மன்னன் போன்ற படங்கள் இவருக்கு பெரிய பிரேக் கொடுத்து இமேஜை உயர்த்தின. பிறகு இளம் பெண்களின் காதல் மன்னனாக இருந்து, பிறகு டாப் ஹீரோவாக உயர்ந்தார்.

அமர்க்களம் படத்தில் சேர்ந்த நடித்த போது அஜித்-ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. 2000 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஷாலினி போட்டோஸ் திருமணத்திற்கு பிறகு மிக அரிதாகவே ஷாலினியின் போட்டோக்கள் வெளியில் வந்தன. சமீப காலமாக அஜித் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள், அஜித் மகளின் போட்டோக்கள் வெளிவருகின்றன.

அப்படி சமீபத்தில் தங்கள் மகனின் பிறந்தநாளை கொண்டாட ஓட்டலுக்கு சென்ற போது அஜித்தும்-ஷாலினியும் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று வெளியாகி செம வைரலானது. அதைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அஜித்-ஷாலினி நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் போட்டோ ஒன்று இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.

இந்த போட்டோ ஒரு பக்கம் ஷாக் கொடுக்கிறது என்றால், மற்றொரு பெரிய ஷாக் இதை பகிர்ந்தது யார் என்பது தான். இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தது அஜித்தின் மச்சினியும், ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி தான்.

அஜித் - ஷாலினிக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகி விட்டதாம் இதை சொல்வதற்காக தான் இந்த ரொமான்டிக் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு தாறுமாறாக லைக்குகளும் குவிந்து வருகிறது. அஜித், நீண்ட வெள்ளை தாடியுடன் ஏகே 61 கெட்அப்பில் இருப்பதால் இது சமீபத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. ப்ளூ லைட் எஃபெக்டில் எடுக்கப்பட்ட இந்த ரொமான்டிக் போட்டோவை பாராட்டியும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com