மகளுடன் நடிகை சுகன்யா வெளியிட்ட போட்டோ : ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

நடிகைகளின் குடும்ப புகைப்படங்கள் வெளிவந்தால் போது உடனே வைரலாகி விடும். அப்படி தான் நடிகை சுகன்யா மகளின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
மகளுடன் நடிகை சுகன்யா வெளியிட்ட போட்டோ : ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. இவரது நிஜ பெயர் ஆர்த்தி தேவி, இயக்குனர் பாரதிராஜா தான் சுகன்யா என பெயர் மாற்றியுள்ளார்.

அதன்பிறகு சின்ன கவுண்டர், கோட்டைவாசல், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் என நிறைய வெற்றிப் படங்களில் நடித்தார். ரஜினியுடன் இணைந்து நடித்திராத இவர் காலா படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன சுகன்யாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்று தனது மகளுடன் வசித்து வருகிறார் சுகன்யா.

இதுவரை தனது மகள் குறித்து புகைப்படத்தையோ அவரை பற்றிய தகவலையோ எங்கேயும் அவர் வெளியிட்டது இல்லை. இந்த நேரத்தில் தான் சுகன்யா அவரது மகளுடன் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் சுகன்யாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com