ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் திடீர் எச்சரிக்கை : காரணம் என்ன தெரியுமா?

ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் திடீர் எச்சரிக்கை : காரணம் என்ன தெரியுமா?

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்து மீம்ஸ்கள் பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் விஜய் நேற்று இரவு திடீரென தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், அரசியல் தலைவர்கள், அரசு பதவியில் இருப்பவர்களை பற்றி கேலியாக சித்தரித்து மீம் வெளியிடக்கூடாது என கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து செய்தால் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் மற்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

விஜய் இந்த சுற்றறிக்கை அனுப்ப காரணம் ஒரு போட்டோ தான். சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் பட ட்ரைலரில் விஜய் காவி நிற பேனரை கிழிப்பது போல காட்சி இருந்தது. அதில் பிரதமர் மோடியின் போட்டோவை வைத்து சிலர் போட்டோஷாப் செய்து வெளியிட்டு உள்ளனர்.

மோடியின் முகத்தில் விஜய் கத்தி வைத்து இருப்பது போல அதில் இருந்தது. இது பற்றி பாஜகவை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் விஜய் ரசிகர்களை எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com