திருமணமான ஒரே வாரத்திற்குள் ஆலியா பட் எடுத்த அதிரடி முடிவு !!

 ரன்பீர் கபூர்- ஆலியா பட்
ரன்பீர் கபூர்- ஆலியா பட்

இந்தி திரையுலகில் நீண்டநாட்கள் காதலர்களாக வலம் வந்தவர்கள் நடிகர் ரன்பீர் கபூர்-நடிகை ஆலியா பட். அவர்களது திருமணம் கடந்த 14ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு பிறகு மும்பை, பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. திருமணத்தில் முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் விருந்தினர்களுக்காக 50 வகையான உணவு கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இத்தாலியன், பஞ்சாபி, மெக்‌சிகன், ஆப்கான் உணவு வகைகள் திருமணத்தில் பிரதான இடம் பிடித்திருந்தது.

நீது கபூர் தனது மகனின் திருமணத்திற்கு டெல்லி மற்றும் லக்னோவில் இருந்து சமையல் கலைஞர்களை வரவழைத்திருந்தார். ஆலியா பட் சைவ உணவு பிரியர் என்பதால் அவருக்காக 25 வகையான சைவ உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலாகின. அவரது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அவரது அடுத்த படம், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி விரைவில் வெளிவர இருக்கிறது. திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரன்பீரை கரம் பிடித்த பின்னர் முதன்முறையாக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே அடியெடுத்து வைத்துள்ளார். இதுபற்றிய புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகி வருகிறது.

அவர் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் என தெரிந்ததும் விமான நிலையத்திற்கு புகைப்படக்காரர்கள் குவிந்து விட்டனர். தொள தொளவென பிங்க் நிற உடையில், கையில் சிறிய பை ஒன்றையும் வைத்து கொண்டு புகைப்படக்காரர்களுக்கு புன்னகையுடன் டாட்டா காண்பித்து புறப்பட தயாரானார்.

அவரது கையில் திருமண மோதிரமும், காய்ந்த சுவடு மாறாத மெகந்தியும் காட்சியளித்தன. இதன்பின் பத்திரிகையாளர்கள் கேட்டு கொண்டதற்காக நின்று போஸ் கொடுத்து விட்டு சென்றார்.

இந்த படப்பிடிப்புக்காக ஆலியா தவிர்த்து, பேஷன் டிசைனர் மணீஷ் மல்கோத்ரா, பட தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை ஷபானா ஆஸ்மி ஆகியோரும் வந்திருந்தனர். படத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், தர்மேந்திரா மற்றும் ஜெயாபச்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com