75வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகல தொடக்கம் !!

பிரான்ஸ் நாட்டின், கேன்ஸ் நகரில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
 75வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகல தொடக்கம் !!

வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன

. இவ்விழாவில், இந்தியா சார்பில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில், நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படம், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது. மேலும், மேலும், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்ற இரவின் நிழல் படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. அதே போல கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் டிரைலரும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com