குருத்தோலை ஞாயிறையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறஸ்துவர்களின் குருத்தோலை பவனி நடைபெற்றது.
குருத்தோலை ஞாயிறையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுக நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறாத நிலையில்

இந்த ஆண்டு குருத்தோலை பவனி இன்று நடைபெறுகிறது.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்பட்டு, அவற்றை அவர்கள் கைகளில் ஏந்தியபடி தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வந்தனர்.

அதைத் தொடர்ந்து ஈஸ்டர் வரை உள்ள 7 நாட்களும் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி போன்ற தினங்கள் அனுசரிக்கப்படும்.

சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் சாந்தோம் தேவாலயம் சார்பில் விமர்சையாக நடைபெற்றத இந்த பவனியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பவனியாக சென்றனர். தீமைகள் அழிந்து நன்மைகள் பலரின் வாழ்க்கையில் ஏற்படுவதற்காக பிரார்த்தனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com