இந்த ஆண்டின் சந்திர கிரகணம் குறித்த முழு விபரம்

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் சந்திர கிரகணம் 16 மே 2022 அன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளன. அதில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள். இதில், ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணம்.

ஆனால் மே 16ம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்த சந்திர கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சந்திரகிரகணம் மே 16ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் ரிஷப ராசியில் நிகழும். இருப்பினும் அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த கிரகணத்திற்குப் பிறகு, ஸ்நானம் செய்வதும் பின்னர் தானம் செய்வதும் முக்கியம், இதனால் கிரகணத்தின் எதிர்மறை பாதிப்புகள் தவிர்க்கப்படலாம்.

இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும்.

அடுத்த சந்திர கிரகணம் நவம்பர் மாதம் நிகழும்- இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் 8 நவம்பர் 2022 அன்று நிகழும். இந்த கிரகணம் மாலை 05:28 மணி முதல் 07:26 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவின் சில பகுதிகளில் தெரியும்.

இந்து மதத்திலும், ஜோதிடத்திலும், கிரகணத்தின் போது சில வேலைகளைச் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. கிரகணத்தின் போது உண்பது மற்றும் பானங்கள் அருந்துவது, கோவில் அல்லது பூஜை அறையின் கதவுகளைத் திறந்து வைத்திருப்பது, கர்ப்பிணிப் பெண்கள் கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவை கிரகண காலத்தில் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com