இந்த பரிகாரம் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

இந்த பரிகாரம் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

பல ஆலயங்களில் நாம் கல் உப்பைக் கொண்டு பரிகாரம் செய்வதை நாம் பார்த்திருப்போம். கல் உப்பை நாம் அன்றாடம் வைத்து பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் நமக்கு உண்டாகின்றது.

உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.

உப்பானது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு இணையாக கூறுகின்றனர். ஏனென்றால், லஷ்மி தேவியும் கடலில் தோன்றியதால்தான் உப்பை ஜீவா ஆத்மாவிற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.

கடலில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கி நம்மை தூய ஆத்மாவாக மாற்றுகிறது. நாம் என்னதான் தீங்கு செய்யாமல் நல்வழியில் சென்றாலும் நம்மை அறியாமலே சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது.

இதனை தடுக்க உப்பை நாம் அன்றாடம் வழிபடுவதன் மூலம் நமது அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன்மூலம் நீங்கள் நினைத்தவை உங்களை நாடி வரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொண்டு கிழக்குப் புறமாக அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் காகிதத்தை வைத்து கைகளை தொடைகளில் வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பின்னர், கைகளை இறுக்கமாக உப்புடன் சேர்த்து மூடி கொள்ள வேண்டும். அதன்பின்பு, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் மனதில் நினைத்து வேண்டுவது எல்லாம் நமக்கு கிடைக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com