சிதம்பரம் கோயில் விவகாரம்: நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

சிதம்பரம் கோயில் குறித்து சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் கோயில் விவகாரம்: நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச திருமணத்தை அமைச்சர் சேகர்பாபு நடத்திவைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்திந்த்த அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் வரலாறு காணத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் முதலமைச்சர் வழிகாட்டுதல்களோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது என கூறினார்.

சட்டமன்றத்தில் அறிவுத்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த போது ஏற்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

சிதம்பரம் கோயில் குறித்து சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறோம். இணை ஆணையர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை பெற்றதும் இந்த பிரச்சனை குறித்து முதலமைச்சர் மேற்பார்வையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர் திருவிழாவில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறி பார்த்துக்கொள்ளப்படும். முத்தமிழறிஞரின் நினைவு நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் தல மரங்கள் நடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கு அதிகமான மரங்களே நடைபெறும். இதுவரை எத்தனை மரங்கள் நடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com